பயணிகள் விமான சேவையைத் தொடங்க ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு அனுமதி!

Photo: Jet Airways Official Twitter Page

பயணிகள் விமான சேவையைத் தொடங்க ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு (Jet Airways) மத்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (Directorate General of Civil Aviation) அனுமதி அளித்துள்ளது.

ஹைதராபாத், சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் ‘ஸ்கூட்’ நிறுவனம்!

மூன்று ஆண்டுகளாக முடங்கி கிடந்த ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம், தனது நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களை மீண்டும் இயக்க அனுமதி அளிக்கக்கோரி மத்திய விமான போக்குவரத்துத்துறையின் ஆணையத்திடம் கோரியிருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பயணிகள் விமான சேவையைத் தொடங்குவதற்கான அனுமதியை இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று (20/05/2022) வழங்கியிருந்தது.

முன்னதாக, மே 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில், விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளைக் கொண்டு சோதனை முறையில் நடைபெற்ற விமான சேவை வெற்றிகரமாக அமைந்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, கொழும்பு இடையேயான ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்துப் பார்ப்போம்!

கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல்களுக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் விமான சேவையைத் தொடங்கியுள்ளதால், மும்பையில் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமையகம் தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதலில் உள்நாட்டு விமான சேவையில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நிதி நெருக்கடி ஓரளவுக்கு குறைந்த பிறகு சர்வதேச விமான சேவையைப் படிப்படியாகத் தொடங்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்குமாறு அழைப்பு!

நிர்வாகக் குளறுபடி, தொழில் போட்டி காரணமாக, கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து விமான சேவையைத் தொடங்க, கடந்த 2020- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரல்லாக் கேப்பிட்டல் என்ற கூட்டமைப்பு முன்வந்து, நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.