சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள் – நடிகைகள் ட்வீட்!

COVID-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த COVID-19 அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பன்னாட்டு விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 261 பேர் பாதிப்பு – 11 பேர் சமூக அளவில் பாதிப்பு..!

இதற்கிடையே கொரோனா வைரஸால் இந்திய திரையுலகமும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகைகள் ஹன்சிகா மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்துள்ள விமானம் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

”சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வீடு திரும்புவதற்கு சிங்கப்பூர் தெலுங்கு சமாஜம் அடுத்த வாரம் சிங்கப்பூரிலிருந்து ஹைதராபாத் செல்ல தனியார் விமானம் திட்டமிடப்பட்டுள்ளது.”

“நீங்கள், உங்கள் குடும்பத்தினர் என யாரவது இந்த விமானத்தில் பயணிக்க விரும்பினால், தயவுசெய்து உங்கள் முழுப் பெயர் மற்றும் மொபைல் எண்ணை இப்போதே, singhydplane@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்” எனப் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் வீராசாமி ரோட்டில் உள்ள கடைவீட்டில் வசிக்கும் 13 பேர் பாதிப்பு..!