இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தியாவின் திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, அமிர்தசரஸ், கோழிக்கோடு, சென்னை, லக்னோ, ஜெய்ப்பூர், சண்டிகர், சூரத், வாரணாசி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு தொடர்ந்து விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
குறிப்பாக, திருச்சி மற்றும் ஷார்ஜா இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 613 என்ற விமானத்தையும், ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு IX 614 என்ற விமானத்தையும் இயக்கி வருகிறது.
இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
விமான பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் கட்டணம், முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.