ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்குமாறு அழைப்பு!

Photo: Air India Express Official Twitter Page

இந்தியாவில் உள்ள முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). இந்த விமான நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, ஓமன், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது.

‘மதுரை, தோஹா இடையே விமான சேவை’- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று (18/05/2022) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் Pricing Analyst / Demand Analyst Grade- M-1, Route Manager Grade- M- 2, Officer – [OCC] Grade – M-1, Deputy Manager OCC Grade M-3 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்தவர்கள் உடனடியாக https://careers.airindiaexpress.in/ என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

‘திருச்சி, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இதில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் டெல்லி (அல்லது) மும்பையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றலாம். குறைபட்ச சம்பளம் ஆண்டுக்கு ரூபாய் 4,00,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, மேலும் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டவிட்டர் பக்கம், அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.