வந்தே பாரத் 4ம் கட்டம் வரும் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது

வந்தே பாரத் - மேலும் 36 விமானங்கள்uly 3 2020
Image Courtesy - AIR INDIA

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் கண்டறியப்பட்டு பல நாடுகளிலும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு இந்தியாவில், கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமலானது. கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால், நாட்டில் சரக்கு போக்குவரத்துக்கான ரயில்கள் மட்டும் இயங்கி வருகின்றன. மற்ற அனைத்து ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதேபோன்று விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும், மாணவ மாணவியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக கடந்த மே 6ந்தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் நான்காம் கட்டம், வரும் ஜூலை 3ந்தேதி முதல் 15ந்தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் 170 விமானங்களை இயக்கவுள்ளது. இதுபற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, வங்காளதேசம், தாய்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன் மற்றும் வியட்நாம் ஆகிய 17 நாடுகளிடையே விமானங்கள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளது.