‘திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ஏர் ஏசியா விமான சேவை’- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: AirAsia

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது ஏர் ஏசியா நிறுவனம் (Air Asia). இந்த வழித்தடத்தில் தினசரி இரண்டு விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் ஏர்பஸ் 320 என்ற விமானத்தை இயக்கி வருகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்!

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்கு குறைந்தபட்ச விமான பயணக் கட்டணமாக ரூபாய் 7,983 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு குறைந்தபட்ச விமான பயணக் கட்டணமாக ரூபாய் 6.813 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற விமான நிறுவனங்களை காட்டிலும் ஏர் ஏசியா விமான நிறுவனத்தில் கட்டணங்கள் குறைவு என்பதால், திருச்சி, கோலாலம்பூர் இடையேயான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விண்ணில் பாய்ந்தது SSLV ராக்கெட்!

விமான பயண அட்டவணை மற்றும் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.