மஸ்கட்டில் இருந்து இந்தியாவின் எந்தெந்த நகரங்களுக்கு விமான சேவையை வழங்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்?- விரிவான தகவல்!

Photo: Air India Express Official Twitter Page

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இந்தியாவின் எந்தெந்த நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். மஸ்கட்டில் இருந்து இந்திய நகரங்களுக்கு வருவதற்கு விமான பயண கட்டணத்தில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

‘திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ஏர் ஏசியா விமான சேவை’- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு வாரத்தில் ஏழு விமான சேவைகளையும், மஸ்கட்டில் இருந்து கோழிக்கோட்டிற்கு வாரத்தில் ஏழு விமான சேவைகளையும், மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் ஒரு விமான சேவையையும், மஸ்கட்டில் இருந்து ஹைதராபாத்திற்கு வாரத்தில் இரண்டு விமான சேவைகளையும், மஸ்கட்டில் இருந்து விஜயவாடாவுக்கு வாரத்தில் ஒரு விமான சேவையையும், மஸ்கட்டில் இருந்து மங்களூருவுக்கு வாரத்தில் மூன்று விமான சேவைகளையும், மஸ்கட்டில் இருந்து பெங்களூருவுக்கு வாரத்தில் ஒரு விமான சேவையையும், மஸ்கட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாரத்தில் ஆறு விமான சேவைகளையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்!

அதேபோல், இந்திய நகரங்களில் இருந்தும் மஸ்கட்டிற்கு விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Air India Express Official Twitter Page