சென்னை மற்றும் அபுதாபி இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவையை ஏர் அரேபியா நிறுவனம் (Air Arabia) தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி, சென்னையில் இருந்து அபுதாபிக்கு 3L142 என்ற விமானத்தையும், அபுதாபியில் இருந்து சென்னைக்கு 3L141 என்ற விமானத்தையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airarabia.com/en என்ற ஏர் அரேபியாவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.