ஹைதராபாத், சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் ‘ஸ்கூட்’ நிறுவனம்!

Photo: Flyscoot Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் திருச்சி, கோவை, ஹைதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்குமாறு அழைப்பு!

குறிப்பாக, ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து இரு மார்க்கத்திலும் ஸ்கூட் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது. மே மாதத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனம், ஜூன் மாதம் முதல் அனைத்து நாட்களிலும் தினசரி விமான சேவையை வழங்கவுள்ளது.

சென்னை, கொழும்பு இடையேயான ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்துப் பார்ப்போம்!

இந்த வழித்தடத்தில் A320 என்ற விமானத்தை விமான நிறுவனம் இயக்கி வருகிறது. இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.