சென்னை, கொழும்பு இடையேயான ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்துப் பார்ப்போம்!

Photo: SriLankan Airlines Official Twitter Page

இலங்கையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SriLankan Airlines), இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து கொழும்பு வழியாக சர்வதேச விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் பெருநகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, லண்டன், தோஹா, குவைத், சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களுக்கு சர்வதேச விமான சேவையை ஸ்ரீலங்கன் நிறுவனம் வழங்கி வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்குமாறு அழைப்பு!

அந்த வகையில், சென்னை மற்றும் கொழும்பு இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வழித்தட விமான சேவையானது தினசரி விமான சேவை ஆகும். சென்னையில் இருந்து கொழும்பு செல்வதற்கு பயணக் கட்டணமாக ரூபாய் 8,259 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமான பயண சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

துபாயில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு பயண கட்டணத்தில் அதிரடி சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.