சிங்கப்பூரில் இந்திய நாட்டவர் மரணம் – சுகாதார அமைச்சகம்..!

சிங்கப்பூரில் இந்த வார தொடக்கத்தில், இதய நோயால் இறந்த 44 வயதான இந்திய நாட்டவருக்கு COVID-19 நோய்த்தொற்று பாதிப்பு இருந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (ஜூன் 11) தெரிவித்துள்ளது.

COVID-19 அல்லாத வேறு மருத்துவ சிக்கல்களால் இறந்த 7வது கொரோனா வைரஸ் நோயாளி இவர் ஆவார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 422 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவு – சமூக அளவில் 5 பேர் பாதிப்பு..!

சிங்கப்பூரில் சம்பவம் 39327 என அடையாளம் கானப்படும் இவர் இந்திய நாட்டை சேர்ந்தவர்.

கடந்த மே 28 அன்று மார்பு மற்றும் epigastric வலி காரணமாக பொது கிளினிக்கில் மருத்துவ சிகிச்சையைப் பெற்றார் என்று MOH தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த திங்களன்று, அவர் வசிப்பிடத்தில் மயக்கமடைந்ததை தொடர்ந்து, சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது புதன்கிழமை அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, இதற்கு இதய கோளாறு காரணம் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

கிருமித்தொற்று அல்லாத வேறு மருத்துவ கோளாறு காரணமாக அவர் இறந்ததால், கொரோனா கிருமியால் உயிரிழந்த நபர்களின் பட்டியலில் அவர் சேர்க்கப்பட மாட்டார்.

சிங்கப்பூரில் தற்போது வரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாடலை வெளியிட்ட சிங்கப்பூர்க் கலைஞர்கள்..!