இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஜூன் 30ம் தேதிக்கு பிறகு துவங்கப்படலாம்..?

ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னர் திட்டமிட்டதை விட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது விரைவில் நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. வந்தே பாரத் மிஷனை நடத்துவதை தடை செய்வதாக அச்சுறுத்தியது. ஆரம்பத்தில் சர்வதேச அளவில் பறக்க அனுமதிக்கப்பட்ட ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா மட்டுமே. எந்தவொரு அமெரிக்க விமான நிறுவனமும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்காததால், இந்தியர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கர்களும் ஏர் இந்தியா மூலம் சென்றனர்.

சமீபத்திய தகவல்படி இதுவரை 1,25,000 இந்தியர்கள் விமானங்களில் நாடு திரும்பி உள்ளனர், கிட்டத்தட்ட 43,000 பேர் இந்தியாவுக்கு வெளியே சென்றுள்ளனர். இதற்கான அனுமதி ஜூன் 30க்கு பிறகு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக டெல்லி-நியூயார்க், மும்பை-நியூ யார்க் துவக்கப்படலாம் என அரசுடன் தொடர்புடைய சில வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே போன்று வளைகுடா நாடுகளுக்கு சில தனியார் விமான நிறுவன சேவைகளும் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்களையும், மெட்ரோ ரயில் சேவைகளையும் துவக்க மாநிலங்கள் தயக்கம் காட்டுவதால், அது குறித்த அறிவிப்பு எதையும் மத்திய அரசு வெளியிடாது என்றும் சொல்லப்படுகிறது.