காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!

Photo: Commonwealth Games 2022- Gold Medalist Jeremy Lalrinnunga Official Twitter Page

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி இரண்டு தங்கப்பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட்: சென்னைக்கு வந்த வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு!

72 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டி (Commonwealth Games), கடந்த ஜூலை 28- ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜூலை 30- ஆம் தேதி அன்று நடைபெற்ற காமன்வெல்த் பளுத்தூக்குதலில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என நான்கு பதக்கங்களை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.

திருச்சி, கோலாலம்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான் 61 கிலோ எடைப்பிரிவில் 269 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் குருராஜா வெண்கலப் பதக்கத்தையும், மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (31/07/2022) நடைபெற்ற காமன்வெல்த் பளுத்தூக்குதல் போட்டியின் 67 கிலோ எடைப்பிரிவில் 300 கிலோ எடையைத் தூக்கி இந்திய வீரர் ஜெரேமி லால்ரின்னுங்கா (Jeremy Lalrinnunga) முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து அபுதாபிக்கு விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்?- விரிவான தகவல்!

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களைக் குவித்து வரும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.