திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, மலிண்டோ ஏர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றன.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines), திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மூன்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்கி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் ஏசியா நிறுவனம் (Air Asia), திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி இரண்டு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக பாலித்தீவுக்கும் விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் வழங்கி வருகிறது.
மலிண்டோ ஏர் நிறுவனம் (Malindo Air), திருச்சி, கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி ஒரு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.malindoair.com/in/ என்ற மலிண்டோ ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SriLankan Airlines), திருச்சி, கோலாலம்பூர் இடையேயான விமான சேவையை கொழும்பு வழியாக வழங்கி வருகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Flyscoot), திருச்சி, கோலாலம்பூர் இடையேயான விமான சேவையை சிங்கப்பூர் வழியாக வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் தினசரி இரண்டுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.