“திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘ஏர் ஏசியா’ விமான சேவை!”

Photo: AirAsia

‘ஏர் ஏசியா’ விமான நிறுவனம் (Air Asia), இந்தியாவில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருச்சி மற்றும் மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவையை ஏப்ரல் 5- ஆம் தேதி அன்று தொடங்கியது ஏர் ஏசியா நிறுவனம்.

“சென்னை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை”- ஏர் அரேபியா நிறுவனம் அறிவிப்பு!

இதனால், திருச்சி, கோலாலம்பூருக்கு இடையேயான விமான பயணச் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தட விமான சேவைத் தொடர்பான பயண அட்டவணை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஏப்ரல் மாதத்தில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரு மார்க்கத்திலும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மே மாதம் முதல் திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவையை வழங்கவுள்ளது ஏர் ஏசியா நிறுவனம்.

“இந்தியாவில் இருந்து தாய்லாந்து, மலேசியாவிற்கு மீண்டும் விமான சேவை”- ஏர் ஏசியா அறிவிப்பு!

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.