“இந்தியாவில் இருந்து தாய்லாந்து, மலேசியாவிற்கு மீண்டும் விமான சேவை”- ஏர் ஏசியா அறிவிப்பு!

Photo: AirAsia

ஏர் ஏசியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் இருந்து மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும். விமான சேவை எப்போது தொடங்கும் என்பது தொடர்பான பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் பெங்களூரு, கோலாலம்பூர் மற்றும் சென்னை, கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே ஏப்ரல் 5- ஆம் தேதி விமான சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

“சென்னை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை”- ஏர் அரேபியா நிறுவனம் அறிவிப்பு!

மேலும், ஏப்ரல் 18- ஆம் தேதி முதல் கொச்சி, கோலாலம்பூர் இடையே விமான சேவை தொடங்கப்படவுள்ளது. ஏப்ரல் 23- ஆம் தேதி முதல் கொல்கத்தா, கோலாலம்பூர் இடையேயும், மே 1- ஆம் தேதி முதல் ஹைதராபாத், கோலாலம்பூர் இடையேயும் விமான சேவைத் தொடங்கப்படவுள்ளது.

இந்தியாவின் ஐந்து நகரங்களில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு இரு மார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படவுள்ளது. மே 4- ஆம் தேதி முதல் பெங்களூரு, பாங்காக் மற்றும் சென்னை, பாங்காக் இடையே விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளது. மே 2- ஆம் தேதி முதல் கொல்கத்தா, பாங்காக் இடையே விமான சேவைத் தொடங்கப்பட உள்ளது. மே 1- ஆம் தேதி முதல் கொச்சி, பாங்காக் மற்றும் ஜெய்ப்பூர், பாங்காக் இடையே விமான சேவைத் தொடங்கப்பட உள்ளது.

“திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவை”- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர்ஏசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.