“சென்னை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை”- ஏர் அரேபியா நிறுவனம் அறிவிப்பு!

Photo: AirArabia

ஏர் அரேபியா நிறுவனம் (Air Arabia) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஏப்ரல் 27- ஆம் தேதி முதல் சென்னை, அபுதாபி இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவை வழங்கப்படும். வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாட்களிலும் விமான சேவையானது வழங்கப்படும். இந்த வழித்தடத்தில் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பயண அட்டவணை, டிக்கெட் கட்டணம், டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airarabia.com/en என்ற ஏர் அரேபியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம். மேலும், ஏர் அரேபியா நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை நிலையங்கள் (அல்லது) டிராவல் ஏஜெண்ட்டுகளை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் அரேபியா நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.