‘திருச்சி, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவின் திருச்சி, கோழிக்கோடு, டெல்லி, கொச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இரு மார்க்கத்தில் இருந்து தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.

டெல்லி, கோலாலம்பூர் இடையேயான ‘விஸ்தாரா’ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து பார்ப்போம்!

குறிப்பாக, திருச்சி மற்றும் ஷார்ஜா இடையே தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 613 என்ற விமானமும், ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு IX 618 என்ற விமானமும் இயக்கி வருகிறது.

திருச்சி, மஸ்கட் இடையே நேரடி விமான சேவை-ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

இந்த நிலையில், இவ்வழித்தட விமான சேவைக்கான மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.