திருச்சி, மஸ்கட் இடையே நேரடி விமான சேவை-ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி மற்றும் மஸ்கட் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனம் அறிவித்துள்ளது.

துபாயில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு பயண கட்டணத்தில் அதிரடி சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

அதன்படி, வாரத்தில் வியாழக்கிழமைகளில் திருச்சியில் இருந்து இரவு 11.30 PM மணிக்கு புறப்படும் IX 619 என்ற விமானம், அதிகாலை 02.00 AM மணிக்கு மஸ்கட் விமான நிலையத்தைச் சென்றடையும். அதேபோல், வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மஸ்கட்டில் இருந்து அதிகாலை 03.00 AM மணிக்கு புறப்படும் IX 620 என்ற விமானம், காலை 08.20 AM மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்.

“திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி இரண்டு விமான சேவை”- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

இந்த விமானச் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமான சேவை மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.