டெல்லி, கோலாலம்பூர் இடையேயான ‘விஸ்தாரா’ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து பார்ப்போம்!

Photo: Vistara Airlines Official Twitter Page

டெல்லி (Delhi), கோலாலம்பூர் (Kuala Lumpur) இடையே இரு மார்க்கத்திலும் சிங்கப்பூர் வழியாக தினசரி விமான சேவையை விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் (Vistara Airlines) வழங்கி வருகிறது. டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடையும். அங்கு ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் வரை விமானம் நிறுத்தப்பட்டிருக்கும். பின்னர், அங்கிருந்து புறப்படும் விமானம் சுமார் ஒரு மணி நேரத்தில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடையும்.

திருச்சி, மஸ்கட் இடையே நேரடி விமான சேவை-ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

இந்த வழித்தட விமான சேவைக்கான மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airvistara.com/in/en என்ற விஸ்தாரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘திருச்சியில் இருந்து துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

தலைநகர் டெல்லி முக்கிய வர்த்தக நகரமாக திகழுவதால், டெல்லி மற்றும் கோலாலம்பூர் விஸ்தாரா விமான சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக தகவல் கூறுகின்றன. வரும் நாட்களில் இந்த வழித்தடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான சேவையை விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.