திருச்சி, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Wikipedia

இந்தியாவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையையும், வெளிநாட்டு விமான சேவையையும் அதிகளவில் வழங்கி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஷார்ஜா, சவூதி அரேபியா, தோஹா, ஜெட்டா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘ஏர் ஏசியா’ விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அந்த வகையில், திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஷார்ஜாவுக்கு தினசரி மற்றும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 613 என்ற விமானமும், ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு IX 614 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்வதற்கு விமான பயணக் கட்டணமாக ரூபாய் 11,073 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!

டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.