ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் Deputy Manager, Manager (Training), Manager (Technical Instructor), Deputy Manager (Finance) ஆகிய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு டெல்லி மற்றும் மும்பையில் பணி வழங்கப்படும். மேலும், விண்ணப்பிப்பவர்கள், இந்த துறையில் முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

“கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு குறைந்தக் கட்டணத்தில் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://careers.airindiaexpress.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, மஸ்கட் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், குறைந்தக் கட்டணத்தில் விரைவான மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.