“திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி இரண்டு விமான சேவை”- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

Photo: AirAsia

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி நேரடி விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் (AirAsia Airlines) தொடர்ந்து வழங்கி வருகிறது.

திருச்சி, அபுதாபி இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அதன் தொடர்ச்சியாக, ஏர் ஏசியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வரும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி முதல் திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி இரண்டு விமான சேவை வழங்கப்படும். இது நேரடி விமான சேவை ஆகும். இந்த வழித்தட விமான சேவைக்கு ஏர்பஸ் 320 என்ற விமானத்தை விமான நிறுவனம் இயக்கவுள்ளது.

திருச்சியில் இருந்து காலை 09.25 AM மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 03.55 PM மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தை சென்றடையும். அதேபோல், திருச்சியில் இருந்து இரவு 10.30 PM மணிக்கு புறப்படும் விமானம், அதிகாலை 05.05 AM மணிக்கு கோலாலம்பூரைச் சென்றடையும்.

திருச்சி, தோஹா இடையே தினசரி விமான சேவையை வழங்கி வரும் ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனம்!

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்கு விமான பயண கட்டணமாக ரூபாய் 7,730 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தட விமான பயண சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.