துபாயில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு பயண கட்டணத்தில் அதிரடி சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சியில் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் இடையே ‘Al Maktoum Dubai’ (Dubai World Central- ‘DWC’) இரு மார்க்கத்திலும் நேரடி தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது.

திருச்சி, தோஹா இடையே தினசரி விமான சேவையை வழங்கி வரும் ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனம்!

இந்த நிலையில், இவ்வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்வதற்கான கட்டணம் 299 திர்ஹாம் (299 Dirhams) பயணக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூபாய் 6,284.93 ஆகும். மே 10- ஆம் தேதி முதல் ஜூன் 22- ஆம் தேதி வரை பயணிப்பவர்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 05.00 PM மணிக்கு புறப்படும் IX 612 என்ற விமானம், இரவு 10.40 PM மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்.

“திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி இரண்டு விமான சேவை”- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

இது தொடர்பான, மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.