திருச்சி, தோஹா இடையே தினசரி விமான சேவையை வழங்கி வரும் ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனம்!

Photo: SriLankan Airlines Official Twitter Page

திருச்சி, தோஹா இடையே தினசரி விமான சேவையை ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ (SriLankan Airlines) நிறுவனம் வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து மதியம் 03.30 PM மணிக்கு புறப்படும் விமானம் கொழும்பு வழியாக இரவு 08.55 PM மணிக்கு தோஹாவைச் சென்றடையும்.

திருச்சி, அபுதாபி இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அதேபோல், தோஹாவில் இருந்து இரவு 10.10 PM மணிக்கு புறப்படும் விமானம், கொழும்பு வழியாக அடுத்தநாள் மதியம் 02.30 PM மணிக்கு திருச்சியை வந்தடையும். இந்த விமானம், கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, குவைத் இடையே விமான சேவை- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இந்த விமான சேவைக்கு ஏர்பஸ் A320 என்ற விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழித்தட விமான சேவைக்கான மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.