திருச்சி, குவைத் இடையே விமான சேவை- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: SriLankan Airlines Official Twitter Page

திருச்சி, குவைத் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும் என்று இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவையானது தினசரி விமான சேவை ஆகும். திருச்சியில் இருந்து புறப்படும் விமானம் கொழும்பு வழியாக குவைத் சென்றடையும். இதற்காக ஏர்பஸ் A321 என்ற விமானம் இயக்கப்படவுள்ளது.

‘சென்னை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘திருச்சியில் இருந்து துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

கொழும்பு வழியாக விமானங்கள் இயக்கப்படுவதால், திருச்சியில் இருந்து இலங்கைக்கு தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் தொழிலதிபர்களுக்கு விமான சேவை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.