திருச்சி, அபுதாபி இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சி, அபுதாபி இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த வழித்தடத்தில் விமானங்களை இயக்கி வருகிறது.

‘திருச்சியில் இருந்து துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

திருச்சியில் இருந்து மதியம் 12.00 PM மணிக்கு புறப்படும் IX 639 என்ற விமானம், மதியம் 02.35 PM மணிக்கு அபுதாபியைச் சென்றடையும். அதேபோல், அபுதாபியில் இருந்து மாலை 03.35 PM மணிக்கு புறப்படும் IX 638 என்ற விமானம், இரவு 09.10 PM  மணிக்கு திருச்சியை வந்தடையும்.

திருச்சி, குவைத் இடையே விமான சேவை- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இந்த வழித்தட விமான சேவைக்கான மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.