ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவின் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இருமார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது.
சென்னை, கோலாலம்பூர் இடையேயான ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து பார்ப்போம்!
குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில், திருச்சி மற்றும் அபுதாபி இடையே இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவைகளை வழங்கி வருகிறது.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே திருச்சி மற்றும் அபுதாபி இடையே விமான சேவையை வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து அபுதாபிக்கு IX 639 என்ற விமானமும், அபுதாபியில் இருந்து திருச்சிக்கு IX 640 என்ற விமானமும் இயக்கி வருகிறது.
பயணிகள் விமான சேவையைத் தொடங்க ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு அனுமதி!
இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை மற்றும் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
