விண்ணில் பாய்ந்தது SSLV ராக்கெட்!

PHOTO: ISRO Official Twitter Page

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது SSLV ராக்கெட். இன்று (07/08/2022) அதிகாலை 03.18 AM மணிக்கு துவங்கிய 6 மணி நேர கவுன்ட்டவுன் முடிந்ததையடுத்து, இஓஎஸ் 02, ஆஸாதிசாட் என்ற எடைக் குறைந்த இரண்டு செயற்கைகோள்களுடன் காலை 09.10 AM மணிக்கு SSLV ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.

“சென்னை, மும்பை இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும்”- ஆகாஷா ஏர் நிறுவனம் அறிவிப்பு!

எடைக் குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் SSLV ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் SSLV ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்திருந்தனர். அதேபோல், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணி நேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் SSLV பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸாதி செயற்கைக்கோளை அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகள் உருவாக்கியுள்ளனர். 8 கிலோ எடைக் கொண்ட ஆஸாதிசாட்டில் சோலார் பேனல்களைப் படம்பிடிக்கும் செல்பி கேமரா உள்ளது. 142 கிலோ எடைக் கொண்ட இஓஎஸ்- 02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இண்டிகோ விமானம் மீது வேகமாக மோதிய கார்!

குறைந்த எடையுள்ள SSLV ராக்கெட்டை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனைப் படைத்துள்ளது. எடைக்குறைந்த இஓஎஸ் 02, ஆஸாதிசாட் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், விண்ணுக்கு அனுப்பிய இரண்டு செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை; செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னலைக் கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.