இண்டிகோ விமானம் மீது வேகமாக மோதிய கார்!

Photo: Indigo Airlines Screen grab from the viral video

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ நிறுவன விமானத்தின் முன்பகுதியில் கார் ஒன்று வேகமாக வந்து விமானம் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுதளத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு செல்ல வேண்டிய விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான கார் கட்டுப்பாட்டை இழந்து, அந்த விமானத்தின் முன்பகுதியில் அதிக வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 6E-2022 என்ற இண்டிகோ விமானம் ஆகும்.

முதலில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கார் வந்திருக்கவேக் கூடாது? யார் அந்த காரை அங்கேயே அனுமதித்தது? என்று அடுக்கடுக்கானக் கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து, தகவலறிந்த விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். அத்துடன், உயர்மட்ட விசாரணைக்கும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

‘கோவை, கோலாலம்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இச்சம்பவத்தால், டெல்லியில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான, காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.