மதுரை, தோஹா இடையே இருமார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (Srilankan Airlines) அறிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பிரபல விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரையில் இருந்து கொழும்பு வழியாக தோஹாவுக்கு விமானங்கள் இயக்கப்படும். அதேபோல், தோஹாவில் இருந்து கொழும்பு வழியாக மதுரைக்கு விமானங்கள் இயக்கப்படும். விமான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இந்த வழித்தடத்தில் விமான சேவை வழங்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, கோலாலம்பூர் இடையேயான ‘விஸ்தாரா’ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து பார்ப்போம்!
இந்த வழித்தட விமான சேவையானது இலங்கையின் கொழும்பு வழியாக செல்வதால், மதுரையில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கும், அங்கிருந்து மதுரைக்கு வரும் பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.