“கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு குறைந்தக் கட்டணத்தில் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து ஷார்ஜாவுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

திருச்சி, மஸ்கட் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோழிக்கோடு மற்றும் ஷார்ஜா இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி பயணிகள் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 351 என்ற விமானமும், ஷார்ஜாவில் இருந்து கோழிக்கோட்டிற்கு IX 354 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு ரூபாய் 8,000 கட்டணத்தில் பயணம் செய்யலாம். இது வரும் ஜூலை முதல் அமலுக்கு வரும். மேலும், குறைந்தப் பட்ச பயணக்கட்டணமாக ரூபாய் 8,000- ம், அதிகபட்சக் கட்டணமாக ரூபாய் 13,000- ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை- ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.