டெல்லி, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை- ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையையும், சர்வதேச விமான சேவையையும் வழங்கி வருகிறது. சர்வதேச விமான சேவையைப் பார்த்தோமேயானால், சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா, துபாய், சவூதி அரேபியா, ஓமன், கோலாலம்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதே விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில், டெல்லி மற்றும் ஷார்ஜா இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. டெல்லியில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 135 என்ற விமானமும், ஷார்ஜாவில் இருந்து டெல்லிக்கு IX 136 என்ற விமானமும் இயக்கி வருகிறது.
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக ரோபோக்கள் அறிமுகம்!
இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.