திருச்சி, மஸ்கட் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகம், மஸ்கட், கோலாலம்பூர், சிங்கப்பூர், குவைத், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, டெல்லி பெங்களூரு, மங்களூரு, மதுரை, ஜெய்ப்பூர், கொச்சி, கண்ணூர், லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு, விஜயவாடா, வாரணாசி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவையை வழங்கி வருகிறது.

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக ரோபோக்கள் அறிமுகம்!

அந்த வகையில், திருச்சி மற்றும் ஓமன் நாட்டின் மஸ்கட் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த வழித்தடத்தில் விமான நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது.

திருச்சியில் இருந்து மஸ்கட்டிற்கு வாரத்தில் வியாழன்கிழமை மட்டும் IX 619 என்ற விமானமும், மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் IX 620 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

டெல்லி, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை- ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த மேலும், விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.