‘இந்தியாவின் திருச்சி, டெல்லி உள்பட 10 நகரங்களில் இருந்து துபாய்க்கு விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

Photo: Wikipedia

இந்தியாவில் சர்வதேச விமான சேவை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவையை அதிகரித்து வருகின்றன விமான நிறுவனங்கள். அதன்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஏர் ஏசியா, ஸ்பைஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கான அட்டவணையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் ஆவின் பால்!

அந்த வகையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாரந்தோறும் இந்தியாவில் இருந்து துபாய்க்கு இரு மார்க்கத்திலும் 80 விமானங்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி, இந்தியாவின் திருச்சி, டெல்லி, கொச்சி, லக்னோ, கோழிக்கோடு, மங்களூரு, ஜெய்ப்பூர், மும்பை, திருவனந்தபுரம், அமிர்தசரஸ் ஆகிய 10 நகரங்களில் இருந்து துபாய்க்கு இரு மார்க்கத்திலும் விமானங்கள் இயக்கப்படவுள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் தகவல்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் (அல்லது) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெட்டா, கோழிக்கோடு இடையே கூடுதல் விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

குறிப்பாக, திருச்சியில் இருந்து துபாய்க்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.