ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சவுதி அரேபியாவின் மிகப்பெரிய நகரமான ஜெட்டா (Jeddah) மற்றும் கேரளா மாநிலம் கோழிக்கோடு இடையே கூடுதல் விமான சேவை வழங்கப்படவுள்ளது. அதன்படி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரு மார்க்கத்திலும் விமானங்கள் இயக்கப்படும். வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் மே 6- ஆம் தேதி வரை இந்த அட்டவணைப்படி விமான சேவை வழங்கப்படும்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 1498 என்ற விமானம் ஜெட்டாவில் இருந்து காலை 06.00 AM மணிக்கு புறப்பட்டு, கோழிக்கோட்டை பிற்பகல் 02.30 PM மணிக்கு வந்தடையும். அதேபோல், கோழிக்கோட்டில் இருந்து மாலை 06.40 PM மணிக்கு புறப்படும் IX 1499 என்ற விமானம், இரவு 10.40 PM மணியளவில் ஜெட்டாவை சென்றடையும்.
இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது, பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு என்ற https://www.airindiaexpress.in/en இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இவ்வழித்தடத்தில் வெள்ளிக்கிழமைகளில் வழக்கமாக ஒரு விமானம் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக ஒரு விமான சேவை சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#FlyWithIX: Fly every Fridays between JEDDAH & KOZHIKODE
Additional flights FROM 1st APRIL TO 6th MAY 2022!@CGIJeddah @IndianEmbRiyadh pic.twitter.com/eW7vwMYt4Q
— Air India Express (@FlyWithIX) March 29, 2022