கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக ரோபோக்கள் அறிமுகம்!

File Photo

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

திருச்சி, ஷார்ஜா இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.  இந்த விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இதில், குறிப்பாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன.

‘திருச்சி, குவைத் இடையே கூடுதல் விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

இந்த நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி செயற்கை நுண்ணறிவு கொண்ட இரண்டு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்படும் முனையத்தில் ஒரு ரோபோவும், விமானங்கள் வருகை முனையத்தில் ஒரு ரோபோவும் பயணிகளுக்கு தேவையான தகவல்களை நகர்ந்தவாறே வழங்கி வருகின்றன.

பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டிய வழி உள்ளிட்டவைகளைத் தெரிவிக்கும் வகையில், இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.