திருச்சி, ஷார்ஜா இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: IndiGo Official Twitter Page

இந்தியாவின் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் விமான நிறுவனம் ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனம் (Indigo Airlines). இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பிரிட்டன், சீனா, வியட்நாம், கத்தார், வங்கதேசம், டென்மார்க், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘ஏர் ஏசியா’ விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அந்த வகையில், திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தினசரி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான ஷார்ஜாவுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது. இது குறித்து விரிவாகப் பார்ப்போம். திருச்சி மற்றும் ஷார்ஜா இடையே நாள்தோறும் 10- க்கும் மேற்பட்ட விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து தோஹாவுக்கு விமான சேவை வழங்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்?- விரிவான தகவல்!

திருச்சியில் இருந்து புறப்படும் விமானங்கள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ, திருவனந்தபுரம், ஹைதராபாத் வழியாக ஷார்ஜாவுக்கு இருமார்க்கத்திலும் விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.