‘சென்னை, அபுதாபி இடையேயான ஏர் அரேபியா நிறுவனத்தின் நேரடி விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: AirArabia

சென்னை மற்றும் அபுதாபி இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் அரேபியா நிறுவனம் (AirArabia). இந்த வழித்தடத்தில் தினசரி ஒரு விமான சேவையை மட்டுமே விமான நிறுவனம் வழங்கி வருகிறது. சென்னையில் இருந்து புறப்படும் விமானம் சுமார் 4 மணி நேரம் 5 நிமிடங்களில் அபுதாபியைச் சென்றடையும்.

‘திருச்சி, பாலி இடையேயான ஏர் ஏசியா விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

சென்னையில் இருந்து அபுதாபிக்கு 3L142 என்ற விமானமும், அபுதாபியில் இருந்து சென்னைக்கு 3L141 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airarabia.com/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ‘ஏர்பஸ் பெலுகா’ விமானம்!

சென்னை மற்றும் அபுதாபி இடையேயான நேரடி விமான சேவையை ஏர் அரேபியா நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதம் 27- ஆம் தேதி அன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.