முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ‘ஏர்பஸ் பெலுகா’ விமானம்!

Photo: Chennai Airport Official Twitter Page

உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான ‘ஏர்பஸ் பெலுகா’ (Beluga Airbus) முதல் முறையாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

கோவை, ஷார்ஜா இடையேயான ஏர் அரேபியா விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

‘ஏர்பஸ் பெலுகா’ விமானம் குறித்து விரிவாகப் பார்ப்போம். இந்த விமானம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்டது. இது சுமார் 47,000 எடைக் கொண்ட சரக்குகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. விமானத்தின் முன்பகுதி வழியாக சரக்குகளை ஏற்றும் திறன் கொண்ட இந்த விமானம், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 1,650 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது.

இந்த விமானத்தின் பிரத்யேக வடிவமைப்பின் காரணமாக, மற்ற சரக்கு விமானங்களை போல அல்லாமல் செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களை இந்த விமானத்தால் சுமந்து செல்ல முடியும். பெலுகா வகை திமிங்கிலத்தைப் போன்ற உருவத்தைக் கொண்டதால், இந்த விமானத்திற்கு ‘ஏர்பஸ் பெலுகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘திருச்சி, பாலி இடையேயான ஏர் ஏசியா விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக, இந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. திமிங்கலம் போலஉருவம் கொண்ட இந்த விமானம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.