சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, கொச்சி வழியாக இரு மார்க்கத்திலும் தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது இண்டிகோ விமான நிறுவனம் (Indigo Airlines).
‘திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவை’- மலின்டோ ஏர் நிறுவனம் அறிவிப்பு!
அந்த வகையில், இண்டிகோ நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 16- ஆம் தேதி முதல் சென்னை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை வழங்கவுள்ளது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கவுள்ளது.
இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E 1791 என்ற விமானம் மாலை 05.30 PM மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 08.30 PM மணிக்கு அபுதாபி விமான நிலையத்தைச் சென்றடையும். அதேபோல், 6E 1792 என்ற விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து இரவு 09.30 PM மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 03.30 AM மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘திருச்சி, குவைத் இடையேயான விமான சேவை’- புதிய அறிவிப்பை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!
இந்த விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.