‘திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவை’- மலின்டோ ஏர் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Trichy International Airport

திருச்சி, கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ‘மலின்டோ ஏர்’ (Malindo Air) விமான சேவையை வழங்கி வருகிறது. இது நேரடி விமான சேவை ஆகும். தற்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் இவ்வழித்தடத்தில் விமான சேவை வழங்கப்படுகிறது. அதன்படி, திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

‘திருச்சி, குவைத் இடையேயான விமான சேவை’- புதிய அறிவிப்பை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு OD 224 என்ற விமானமும், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு OD 223 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சி, துபாய் இடையேயான ‘இண்டிகோ’ நிறுவனத்தின் நேரடி விமான சேவைக் குறித்துப் பார்ப்போம்!

இந்த நிலையில், வரும் ஜூன்- 1 ஆம் தேதி முதல் திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ‘மலின்டோ ஏர்’ நிறுவனம் தினசரி விமான சேவையை வழங்கவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.malindoair.com/in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1- ஆம் தேதி முதல் மலேசியாவிற்கு செல்லும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு, ஆர்டி- பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை. மேலும், கோவிட்- 19 காப்பீடும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.