ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “திருச்சி மற்றும் குவைத் இடையே மே 3- ஆம் தேதி முதல் அக்டோபர் 25- ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளிலும், வரும் ஜூன் மாதம் 25- ஆம் தேதி முதல் அக்டோபர் 29- ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்கிழமை, சனிக்கிழமைகளில் இரு மார்க்கத்திலும் விமானங்கள் இயக்கப்படும்.
திருச்சியில் இருந்து மதியம் 12.50 PM மணிக்கு புறப்படும் IX693 என்ற விமானம் மாலை 04.10 PM மணியளவில் குவைத்தைச் சென்றடையும். அதேபோல், குவைத்தில் இருந்து மாலை 05.10 PM மணிக்கு புறப்படும் IX694 என்ற விமானம் அதிகாலை 12.35 AM மணியளவில் திருச்சியை வந்தடையும்.
திருச்சி, துபாய் இடையேயான ‘இண்டிகோ’ நிறுவனத்தின் நேரடி விமான சேவைக் குறித்துப் பார்ப்போம்!
இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#FlyWithIX: Fly Trichy 🔄 Kuwait
Booking is open for flights from 3️⃣rd MAY to 29th OCTOBER 2️⃣0️⃣2️⃣2️⃣@indembkwt pic.twitter.com/BtnwhbWMI5
— Air India Express (@FlyWithIX) April 21, 2022