‘அமிர்தசரஸ், ஷார்ஜா இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

Photo: Wikipedia

அமிர்தசரஸ் (Amritsar), ஷார்ஜா (Sharjah) இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) அறிவித்துள்ளது. அதன்படி, வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் இரு மார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ‘Cabin Crew’ பணிக்கு இன்டர்வியூ… பங்கேற்குமாறு பெண்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அழைப்பு!

அமிர்தசரஸில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 137 என்ற விமானமும், ஷார்ஜாவில் இருந்து அமிர்தசரஸுக்கு IX 138 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. அமிர்தசரஸில் இருந்து ஷார்ஜாவுக்கு குறைந்தபட்ச விமான பயண கட்டணமாக ரூபாய் 12,037 ஆகவும், ஷார்ஜாவில் இருந்து அமிர்தசரஸுக்கு குறைந்தபட்ச விமான பயண கட்டணமாக ரூபாய் 8,156 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கொழும்பு இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்த வழித்தட விமான சேவைகளுக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Air India Express Official Twitter Page