சென்னையில் ‘Cabin Crew’ பணிக்கு இன்டர்வியூ… பங்கேற்குமாறு பெண்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அழைப்பு!

Photo: Air India Express Official Twitter Page

இந்தியாவில் உள்ள முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). இந்த விமான நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்துடன், குறைந்தக் கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது.

முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ‘ஏர்பஸ் பெலுகா’ விமானம்!

இந்த நிறுவனத்தில் ‘Cabin Crew’ பணிக்கு பெண்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்தி வருகிறது. அந்த வகையில், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று சென்னையில் ‘Cabin Crew’ பணிக்கான இன்டர்வியூ நடைபெறவுள்ளது. இதில், பெண்கள் மட்டும் கலந்துக் கொள்ளலாம். இதில் கலந்துக் கொள்ள விரும்புவோர் https://blog.airindiaexpress.in/walk-in-interview-chennai/ என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று பெயர், முகவரி, பாஸ்போர்ட் எண், படிப்பு விவரங்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான விவரங்கள், உயரம், எடை உள்ளிட்டவையைக் குறிப்பிட்டு பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

‘சென்னை, அபுதாபி இடையேயான ஏர் அரேபியா நிறுவனத்தின் நேரடி விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரௌன் பிளாசாவில் நடைபெறவுள்ள இன்டர்வியூவில் கலந்துக் கொள்ளலாம். குறித்த மேலும் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Air India Express Official Twitter Page