சென்னை, கொழும்பு இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: IndiGo Official Twitter Page

சென்னை, கொழும்பு இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines) இயக்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சென்னையில் ‘Cabin Crew’ பணிக்கு இன்டர்வியூ… பங்கேற்குமாறு பெண்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அழைப்பு!

சென்னை, கொழும்பு இடையே தினசரி இரண்டு விமான சேவைகளை இரு மார்க்கத்திலும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இவை நேரடி விமான சேவை ஆகும். சென்னையில் இருந்து கொழும்புவுக்கு 6E 1203, 6E 1207 என்ற விமானங்களும், கொழும்புவில் இருந்து சென்னைக்கு 6E 1204, 6E 1208 என்ற விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது.

‘கோழிக்கோடு, மஸ்கட் இடையே விமான சேவை’- அதிரடி ஆஃபரை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!

சென்னையில் இருந்து கொழும்பு செல்ல குறைந்தபட்ச விமான பயண கட்டணமாக ரூபாய் 7,017 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொழும்புவில் இருந்து சென்னைக்கு விமான பயணக் கட்டணம் ரூபாய் 9,503 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.