உலகம் முழுவதும் சர்வதேச விமான சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
“சென்னை, ஷார்ஜா இடையே விமான சேவை”- டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!
அந்த வகையில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர் விமான நிறுவனங்கள்.
அதன் தொடர்ச்சியாக, திருச்சி மற்றும் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை, ஜெட்டா இடையே மீண்டும் விமான சேவை- சவுதி ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
இது தொடர்பாக, இண்டிகோ நிறுவனம் (Indigo Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மே மாதம் 15- ஆம் தேதி முதல் திருச்சி, கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவை வழங்கப்படும். இது நேரடி விமான சேவை ஆகும். கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 6E 1817 என்ற விமானமும், திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு 6E 1816 என்ற விமானமும் இயக்கப்படும்.
இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. விமான பயணச் சேவை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம், திருச்சியில் இருந்து சென்னை வழியாக கோலாலம்பூருக்கு விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.