கொரோனா சோதனை முடிவிற்கு முன், விமான பயணிகளை தங்க வைப்பதற்கு ஓட்டல் ஊழியர்கள் தயக்கம் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து விமானங்களில் வந்த பயணிகள், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். வசதி படைத்த சிலர் அரசின் முகாம்களில் தங்க விரும்பாமல் சொந்த செலவில் அருகில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் தங்கினர்.
இந்நிலையில் பயணி ஒருவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் தங்கி இருந்த ஓட்டல் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானத்தில் வருபவர்களை உடனடியாக ஓட்டலில் தங்க அனுமதிக்க கூடாது என்றும் அவர்களுக்கு கொரோனா சோதனை முடிவு தெரிந்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று ஓட்டல் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.