வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் – இரண்டாவது வாரத்திற்கான பட்டியல்!

வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் வாரத்திற்கான பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் மே 16ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை சேவையில் இருக்கும் விமான விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் முக்கிய பணியான “வந்தே பாரத்” திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 10, 2020) நான்காவது நாளில் நுழைந்த நிலையில், லண்டனில் இருந்து 326 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் மும்பையில் தரையிறங்கியது.

விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியதைப் பற்றி இங்கிலாந்தில் உள்ள இந்திய ஹை-கமிஷன், 326 பேர் சனிக்கிழமை லண்டனில் இருந்து புறப்பட்டதாகவும், பயணிகளின் பொறுமையைப் பாராட்டியதாகவும் கூறியது.

இந்த விமானம் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. மே 9 அன்று துபாய், குவைத், மஸ்கட், ஷார்ஜா, கோலாலம்பூர் மற்றும் டாக்காவிலிருந்து 8 வந்தே பாரத் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கியதால் 1373 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பினர். விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மே 7 முதல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்களை படிப்படியாக திருப்பி அனுப்பத் தொடங்குவதாக திங்களன்று இந்தியா அறிவித்தது. ஏர் இந்தியா மே 7 முதல் மே 13 வரை முதல் வாரத்தில் 64 விமானங்களை இயக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. `வந்தே பாரத் மிஷனின் ‘மூன்றாம் நாளில், வளைகுடா நாடுகள், பிரிட்டன், பங்களாதேஷ் மற்றும் மலேசியாவிலிருந்து இந்தியர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

முதல் வாரத்தில் விமானம் மூலம் சுமார் 15,000 பேர் எதிர்பார்க்கப்பட்டால், இரண்டாவது வாரத்தில் சுமார் 25,000 பேர் எதிர்பார்க்கப்படுகிறார்கள். 106 விமானங்களில், மிகப்பெரிய எண்ணிக்கையானது வளைகுடாவிற்கு இருக்கும், அங்கு ஆயிரக்கணக்கான குடிமக்கள் திரும்ப காத்திருக்கிறார்கள்.

இரண்டாவது வாரத்தில்(16.05.2020 – 22.05.2020) ஐக்கிய நாடுகளுக்கு மொத்தம் 11 விமானங்கள். அபுதாபியிலிருந்து 04 விமானங்களும் துபாயிலிருந்து 07 விமானங்களும் புறப்படும். சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளில் இருந்து தலா 06 விமானங்களும், குவைத் மற்றும் கத்தாரில் இருந்து தலா 03 விமானங்களும், பஹ்ரைன்-ல் இருந்து 02 விமானிகளும் வரும் மே 16ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை இந்த சேவையில் இருக்கும் என்று இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.