சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு உறவினர்கள் கலந்து கொள்ளும் கோயில் திருவிழா – 100 ஆடுகளை வெட்டி விருந்து..!

Madurai Temple function

பொங்கல் தினத்தை முன்னிட்டு சுமார் 100 ஆடுகள் அறுத்து அசைவ அன்னதான திருவிழா நடைபெற்றது, இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபாலாபுரம் முனியாண்டி சுவாமி கோயிலில் 57வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.

இதையும் படிங்க : “மகிழ்சியாக வாழ உயரம் ஒரு தடையில்லை” என்று நிரூபித்த உலகின் மிக குள்ள மனிதர் உயிரிழப்பு!

இதில் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள், கோபாலபுரத்தில் கூடி பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

பகல் 1 மணியளவில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு அறுசுவை அசைவ அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஊர்வலத்தின் சிலம்பாட்டம் ஆடி கிராமத்து இளைஞர்கள் அசத்தினர். அதை தொடர்ந்து திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : இங்க பாருயா!! சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல்!

இதுகுறித்து திருப்பூரினை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர் ராமமூர்த்தி கூறுகையில், ‘‘தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் ஓட்டல் நடத்தி வரும் நாங்கள், தினசரி வரும் முதல் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவிற்காக எடுத்து சேமித்து வைப்பது வழக்கம். மாட்டுப்பொங்கலன்று உறவுகள் சூழ, எங்கள் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடுவோம் என்றார்.

மேலும் சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் பலரும் இந்த பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வோம். உறவுகளில் பெண், மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடைபெறும்’’ என்றார்.